உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர்கள் அசத்தல்

Last Modified : 23 Aug, 2017 11:34 am

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் இந்தியா வீரர்கள் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்திய வீராங்கனை பி.வி சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் கொரியா வீராங்கனை கிம் ஹையோ மின்னை எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரணீத் ஹாங்காங் வீரர் வெய் நாணுடன் மோதினார். இதில் 21-18, 21-17 என்ற புள்ளி கணக்கில் சாய் வெற்றி பெற்றார். இதேபோல் மற்றொரு போட்டியில் ஆஸ்திரியாவின் லூக்கா வார்பேருடன் மோதிய, இந்திய வீரர் அஜய் ஜெயராமன் 21-14, 21-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி இணை இந்தோனேசியா - மலேசியா இணையான ரிரின் அமெலியா மற்றும் அன்னா ஜிங்கை 21-15, 21-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா - மலேசியா இணையான ப்ரஜெக்தா மற்றும் யோகேந்திரன் கிருஷ்ணன், இந்திய ஜோடியான பிரணாவ் சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டியிடம் 21-12 21-19 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவின் மற்றைய ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சுமித் ரெட்டி மற்றும் அஷ்வினி, சாத்விக்சாய்ராஜ் மற்றும் மனீஷா இணைகள் தோல்வியை சந்தித்தன. இதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ரெட்டி ஆகியோர் ஜப்பான் அணியிடம் 8-21, 12-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர்.

Advertisement:
[X] Close