• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

43 பந்துகளில் முதல் சதம்; பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி அசத்தல்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இங்கிலாந்தில் 'நாட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட்' உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டத்தில், ஹாம்ப்ஷிர்- டாம்பிஷிர் அணிகள் நேற்று மோதிக் கொண்டன. முதலில் டாஸ் ஜெயித்து ஹாம்ப்ஷிர் அணியின் துவக்க வீரர்கள் ஷாஹித் அப்ரிடி - கேப்டன் ஜேம்ஸ் வின்சி ஆகியோர் களமிறங்கினர். இதில், அதிரடியாக ஆடிய அப்ரிடி, வெறும் 43 பந்துகளில் சதம் அடித்து (101 ரன்கள், 10 பவுண்டரி, 7 சிக்ஸர்) அசத்தினார். மறுமுனையில் இருந்த வின்சி அரைசதம் அடிக்க, ஹாம்ப்ஷிர் அணி 249 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய டாம்பிஷிர் அணி, 148 ரன்களில் சுருண்டது. இதனால், ஹாம்ப்ஷிர் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை 256 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அப்ரிடிக்கு, இதுவே முதல் டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close