யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி; சஞ்சு சாம்சன் நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 05:58 pm

sanju-samson-fails-in-yo-yo-test-dropped-from-india-a-squad-for-england-tour

பிசிசிஐ-ன் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன், இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

சமீபத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் கேரளா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து லண்டனுக்கு, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி புறப்பட்டது. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் சாம்சன் இடம் பெறவில்லை. அவரது யோ-யோ டெஸ்ட்டின் ஸ்கோர் குறித்த உடனடி விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஊடகங்கள் வெளியிட்ட தகவல் படி, சாம்சன் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி கண்டதால், இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்தியன் எக்ஸ்பர்ட்களால், முக்கியமாக ராகுல் ட்ராவிடால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுபவர் சாம்சன். இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட போது, சாம்சனுக்கு அவரது திறமையை வெளிக்காட்ட மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர். இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியிலும் சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில், மூன்று நாட்களுக்கு முன்பு சாம்சன் யோ-யோ டெஸ்ட்டில் தனது அணியுடன் பங்கேற்றார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத செய்திகள், அவருக்கு ஏற்பட்டுள்ள சிறு உலைச்சல்களால் பயிற்சி எடுக்க முடியவில்லை, அதனால் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதற்கிடையில் வந்த தகவல்படி, ஜூன் 14ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய சீனியர் அணி, யோ-யோ டெஸ்ட்டில் தோல்வி அடையவில்லை என்றும் செய்தி வெளியானது. மேலும், ஜூன் 15, 16 தேதிகளில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி, இந்த டெஸ்ட்டில் பங்கேற்க உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close