• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

வங்கதேச மகளிர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீராங்கனை

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 01:18 pm

bangladesh-victory-credits-goes-to-former-indian-skipper-anju-jain

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பையை முதன்முதலில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. கடந்த 6 முறை நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை, வங்கதேசம் வென்றது கூடுதல் சிறப்பம்சமாக வங்கதேச அணி பார்க்கிறது. வங்கதேசத்தின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர், முன்னாள் இந்திய அணி கேப்டன் அஞ்சு ஜெயின். 

கடந்த மே 21ம் தேதி முதல் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் அஞ்சு ஜெயின். இவருடைய உதவியால் வங்கதேசம், இந்தியாவை லீக் போட்டியிலேயே வென்றிருந்தது. 

இது குறித்து அஞ்சு ஜெயின் கூறுகையில், "வங்கதேச அணியுடன் நான் இணைந்தது வேகவேகமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. இந்த அணியில் இருந்த கேட்ட வடிவத்தை கண்டு, அதனின் மனஉறுதியை மட்டும் ஊக்குவிக்க முயற்சியை மேற்கொண்டேன். தற்போது அணி எட்டியிருக்கும் தருணம் மிகப்பெரியது. 

தனிப்பட்ட முறையில் எனக்கும் தான். தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய வங்கதேச அணியில், சில இடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினேன். அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், அணியை பாராட்டியே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் மாற்றத்தை கொண்டு வந்தனர். வங்கதேச மகளிர் அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close