• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

முதல் அமர்விலேயே சதமடித்த முதல் இந்திய வீரரானார் ஷிகர் தவான்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 01:19 pm

shikhar-dhawan-becomes-first-indian-to-hit-test-ton-in-first-session

வரலாற்று டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதமடித்து சாதனை படைத்துள்ளார். 

இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தானுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி இந்தியாவின் துவக்க வீரர்கள் முரளி விஜய் - ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த போட்டியின் முதல் அமர்விலேயே தவான் சதமடித்தார். 

இதன் மூலம், முதல் அமர்விலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகளவில் ஆறாவது வீரர் என்ற சாதனையை தவான் படைத்தார். 87 பந்துகளில் அவர் அடித்த சதத்தால், இந்திய அணி மதிய உணவு இடைவெளிக்கு முன்னர் 158/0 ரன் சேர்த்தது. 

மதிய உணவு இடைவெளிக்கு பிறகு வீசப்பட்ட இரண்டாவது ஓவரில் தவான் ஆட்டமிழந்தார். 96 பந்துகளில், 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன் எடுத்தார். 

கடந்த 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விரேந்தர் சேவாக், 99 ரன் அடித்து ஆட்டமிழந்ததால், அந்த சாதனையை படைக்க தவறினார்.

முதல் அமர்வில் சதமடித்த வீரர்கள்:

விக்டர் டிரம்பர் (ஆஸ்திரேலியா) -  இங்கிலாந்து, மான்செஸ்டர் Manchester (1902)

சார்லி மகார்ட்னே (ஆஸ்திரேலியா) -  இங்கிலாந்துin Leeds (1921)

டான் ப்ராட்மான் (ஆஸ்திரேலியா) -  இங்கிலாந்து, லீட்ஸ் (1930)

மஜித் கான் (பாகிஸ்தான்) -  நியூசிலாந்து, கராச்சி (1976)

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) -  பாகிஸ்தான், சிட்னி (2017)

ஷிகர் தவான் (இந்தியா) -  ஆப்கானிஸ்தான், பெங்களூரு (2018)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close