இந்தியா- ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 02:47 pm

rain-stopped-india-afghanistan-historic-test-match

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் நிறுத்தப்பட்டுள்ளது. 

வரலாற்று டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பெங்களுருவில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய துவக்க வீரர் தவான் சதமடித்து வெளியேற, முரளி விஜய் - லோகேஷ் ராகுல் இணைந்து விளையாடி வந்தனர். இதில் முரளி விஜய் டெஸ்ட் சதத்தை நெருங்கி வருகிறார். 128 பந்துகளில் 94 ரன்களை அவர் அடித்துள்ளார். 

இதற்கிடையே, மழையினால் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. இதனால் மைதானத்தில் பிட்ச் ஈரமாக இருப்பதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே வீரர்களுக்கு டீ பிரேக் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. ஆப்கானின் யாமின் அஹ்மத்ஜாய் 1 விக்கெட் எடுத்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close