முதல் ஒருநாள் போட்டி: மே.தீவுகள் முதல் பேட்டிங்!

  shriram   | Last Modified : 21 Oct, 2018 02:03 pm
1st-odi-india-win-toss-and-choose-to-field

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டி துவங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடியது. இந்தியா 2-0 என அபாரமாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் துவங்கியது. முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணியில், குல்தீப் யாதவ் விளையாடவில்லை. 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. இளம் வீரர் ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் பன்ட் விளையாடுகிறார். மேற்கிந்திய தீவுகள் அணியிலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக துவக்க வீரர் சந்திரபால் ஹேம்ராஜ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close