சென்னையில் தோனி இல்லாத டி20 போட்டி: தொடர் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 12:03 pm
chennai-to-host-last-t20-with-windies

தோனியில்லாமல் இன்று சென்னையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுகிறது இந்திய அணி. 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று கடைசி போட்டி சென்னையில் நடக்கிறது.  

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது தமிழகத்தில் காவேரி போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தன. எனவே சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்க கூடாது என்று போட்டியின் போதே போராட்டங்கள் நடந்தன. அதன் பிறகு சென்னை அணியின் சொந்த மைதானமாக புனே மைதானம் மாற்றப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் போட்டி நடக்கவிருக்கிறது. ஆனால் சென்னையின் 'தல' தோனி இந்த போட்டியில் இருக்கமாட்டார் என்ற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த போட்டி தான் இந்தாண்டு இந்திய அணியின் கடைசி உள்நாட்டு போட்டியாகும். 

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீரர்கள் உமேஷ்யாதவ், பும்ரா மற்றும் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சித்தார்த் கவுல் மட்டும் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை நடந்த 2 போட்டியிலும் ஆடாத வீரர்களுக்கு சென்னையில் வாய்ப்பு கிடைக்கலாம்.

தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கோட்டைவிட்ட மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close