ஆஸ்திரேலியாவை அடக்கிய அஸ்வின்; தனியாக போராடிய ஹெட் !

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 02:36 pm
ausvind-australia-head-back-in-at-191-7

அடிலெய்டு டெஸ்டில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலிய அணியின் ஹெட் அரைசதம் அடித்ததால் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது

நேற்று அடிலெய்டில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாராவின் (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று முக்கிய விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

பின் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்கி 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட்  நிதனமாக விளையாடி அரைசதம் எடுத்தார். 

இதனையடுத்து ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தது. 

2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 59 ரன்கள் பின்தங்கி உள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி சார்பில் அஸ்வின், இஷாந்த், பும்ரா ஆகியோர் தங்களது பந்துவீச்சால் எதிரணியை திணற வைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close