நோ-பால் சர்ச்சை, கோலி கேப்டன்ஷிப்: இஷாந்த் சர்மா பேட்டி

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 02:38 pm
ishant-sharma-hits-back-at-australian-media-over-no-ball-controversy

கோலி களத்தில் இருக்கும் போது தங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்றும் அந்த நாளை நன்றாக முடிப்போம் என்றும் கூறி இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, நோ-பால் சர்ச்சை குறித்து தன்னால் பதில் கூற முடியாது என்று தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இதில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியின் போது இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இஷாந்த் ஷர்மா மொத்தம் ஐந்து நோ-பால்களை வீசியிருந்தார். இதில் சில அம்பயர்களின் கவனக்குறைவால் கண்டுகொள்ளப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "இதற்கு நான் பதில் கூற வேண்டியது இல்லை. ஆஸ்திரேலிய ஊடகங்களாகிய நீங்களே இந்தக் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 

அதில் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். நான் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இக்கட்டான சூழ்நிலையில் அதிகம் விக்கெட்டுகள் எடுக்கவே விரும்புகிறேன். என்றார். 

மேலும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்துபேசிய இஷாந்த்,  "கோலி களத்தில் இருக்கும் போது எங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். அந்த நாளை நன்றாக முடிப்போம். தற்போது இந்த ஆட்டம் சமநிலைக்கு வந்துவிட்டது. நாளைய ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம். நான் புஜாராவுக்கு எதிராகப் பந்துவீசியுள்ளேன். எனக்குத் தெரியும் அவருக்குப் பந்துவீசுவது எவ்வளவு கடினம் என்று. அவர் பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்துவிடுவார். அவர் களத்தில் இருந்தால் கண்டிப்பாக அதிசயங்களை நிகழ்த்துவார்" என்றார். 

2வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் சர்மா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி  2ம் நாள் ஆட்ட நேர முடிவில்  3 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்திருந்தது. இன்றைய மூன்றாவது நாள் போட்டியில், இந்திய அணி 283 ரன்னில் ஆல்அவுட்டானது. தற்போது ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close