இன்று நடக்கிறது ஐபிஎல் ஏலம்!

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 08:16 am
ipl-auction-today-in-jaipur

346 வீரர்கள் கலந்துக்கொள்ளும் ஐபிஎல் ஏலம் இன்று நடக்கிறது. 

கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 12வது சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. 346 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும்.

யுவராஜ் சிங், ஜெய்தேவ் உனட்கட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, லசித் மலிங்கா, டேல் ஸ்டெயின், சாம் கர்ரன், ஷிம்ரான் ஹெட்ம்யெர், ஜோ டென்லி, ரிசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close