பெண்களை இழிவாக பேசுவதா: டிவி நிகழ்ச்சியால் சிக்கலில் ராகுல், பாண்டியா- பிசிசிஐ நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 02:52 pm
bcci-likely-to-take-appropriate-action-against-hardik-pandya

காபி வித் கரண் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலும் தற்போது சிக்கலில் உள்ளனர். 

இந்தியில் புகழ்பெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர். 

அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா பேசி கூறியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.  இதனையடுத்து இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், "காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய யாரையும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். நிகழ்ச்சியின் தன்மையை நினைவில் கொண்டே நான் பேசினேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை" என்று பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு  அவர்கள் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. 

மேலும் இனி கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத ஊடக நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது. 

இந்த நிகழ்ச்சியில் இவர்களின் மற்றொரு பதிலும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. விராட் கோலி, சச்சின் ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு இருவரும் விராட் என்று பதில் அளித்தனர். 

இதனை கலாய்த்த ரசிகர்கள், "இப்படி சொல்வதால் தான், ஆட்டத்தில் எவ்வளவு சொதப்பியும் அணியிலேயே இருக்கிறார்கள்" என்று ட்வீட் செய்து வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close