ஒருநாள் போட்டிக்கு ரிஷப் பண்ட் அவசியம்: ஹர்பஜன் சிங்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 09:56 am
harbhajan-singh-wants-rishabh-pant-in-india-s-odi-squad

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் நிச்சயம் இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. 

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு முடிந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ரோகித் சர்மா மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். மற்றொருபுறம் தோனி அவருக்கு நல்ல பார்டனர்ஷிப் அமைத்து கொடுத்தார். 

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் போது, "ஆடம் கில்கிரிஸ்டிடம் இருந்த அம்சம் ரிஷப் பண்ட்டிடமும் இருக்கிறது. அவரால் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க முடியாது. ஆனால் 30 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயமாக 6 சிக்சர்கள் அடிப்பார். அது விளையாட்டின் போக்கை மாற்றும ஒன்றாக இருக்கும். 

தோனி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும். ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது" என்றார் அவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close