100 விக்கெட்டை எட்டிய புவனேஷ்வர் குமார்!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 10:44 am
bhuvneshwar-kumar-gets-to-100-odi-wickets

இந்திய பந்துவீச்சாளர்  புவனேஷ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த போட்டியின் மூலம் புவனேஷ்வர் குமார் புதிய மைல்கல்லை எட்டி உள்ளார். 

நேற்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார் இரண்டாவது ஓவரில் ஆரோன் பின்ச் விக்கெட்டை பறித்ததன் மூலம் 100 விக்கெட்டை எட்டினார். இவர் தனது 96வது ஒருநாள் போட்டியில் இச்சாதனையை எட்டி உள்ளார். மிக நிதானமாக இந்தச் சாதனையை செய்துள்ள 5வது இந்தியர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக கங்குலி, சச்சின், யுவராஜ், ரவி சாஸ்திரி ஆகியோர் முறையே 308, 268, 266, 100 போட்டிகளுக்கு பிறகே 100 விக்கெட்டை எடுத்தனர். 

மிக வேகமாக இந்த சாதனையைப் படைத்தவர் இர்பான் பதான். அவர் 59 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்தார். சர்வதேச அளவில் வெறும் 44 போட்டிகளில் 100 விக்கெட்டை எட்டியவர் என்ற பெருமையை ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பெற்றுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close