மெல்போர்னில் நடந்து வரும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 230 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ஓருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி விளையாட தொடங்கிய சில நிமிடங்கள் மழைக்குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தொடங்க தாமதமானது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியாக அந்த அணி 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் பீட்டர் ஹேண்ஸ்கேம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.
அதிகபட்சமாக இந்திய அணியின் சாஹல் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
அடுத்ததாக 231 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
newstm.in