பந்தை வாங்கிக்கொள்ளுங்கள்: ஓய்வு வதந்திகள் குறித்து தோனி

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 09:04 am
take-the-ball-or-again-some-people-will-say-i-m-taking-retirement-dhoni

தோனி பந்தை எடுத்துக்கொண்டு சென்றால் அவர் ஓய்வை அறிவித்து விடுவார் என்று பலர் கூறி வரும் நிலையில் நேற்றைய போட்டியில் தன்னிடம் இருந்த பந்தை மறக்காமல் கொடுத்துவிட்டு சென்றார் தோனி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோனியின் 87 நாட் அவுட் குறித்து இன்றும் சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

இந்த  நிலையில் ஆட்டம் முடிந்த மைதானத்திலிருந்து வீரர்களுக்கு கைக் குலுக்கி வெளியேறும்போது, தனது கையில் பந்தை வைத்திருந்தார் தோனி.அப்போது எதிரே வந்த இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய்யிடம், “  என்னிடமிருக்கும் பந்தை  நீங்கள் வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் நான் ஓய்வு பெற போகிறேன் என்று சிலர் கூறுவார்கள்” என்று சிரித்தப்படி கூறினார்.

 

 

இதற்கு முன்னர் சில ஆட்டங்களில் தோனி போட்டி முடிந்தவுடன் கையில் பந்தை  எடுத்து சென்ற போதுபோது, அவர் ஓய்வு பெற இருப்பதாக சிலர் கூறியதற்கு,ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் தற்போது தோனி பதிலளித்திருக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close