ஐசிசியின் அங்கிகாரம்: வளர்ந்து வரும் வீரர் ரிஷப் பண்ட்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 01:16 pm
rishabh-pant-named-icc-emerging-cricketer

2018க்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் இளம் வீரர் ரிஷப் பண்ட்  வளர்ந்து வரும் வீரர் என்ற விருதைப் பெற்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் இளம் வீரர் ரிஷப் பண்ட் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் எடுத்திருந்தார். 

 

— ICC (@ICC) January 22, 2019

 

கடந்தாண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் பண்ட் விளையாடி உள்ளார். அதில் அவர் 537 ரன்கள் அடித்திருந்தார். மேலும் 40 கேட்ச்கள் பிடித்துள்ளார். தோனிக்கு மாற்றாக தற்போதைய நிலையில் இருக்கும் ஒரே வீரர் இவர் தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close