தோனி, கோலி இல்லை: தடுமாறி 92 ரன்கள் எடுத்த இந்திய அணி!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 10:15 am
india-have-been-shot-out-for-92

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி இல்லாமல் இன்று நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 92 ரன்களில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

93 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் 7 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழக்க ஷுப்மன் கில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஒவ்வொருவராக விக்கெட்டை இழந்தனர். 

கடைசியில் இந்திய அணி 30.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் எடுத்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close