கணக்குப்போட்டு விளையாடிய ஹர்திக் பாண்டியா: கவாஸ்கர் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:56 pm
sunil-gavakar-was-delighted-with-hardik-pandya-s-calculated-assault

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா வெறும் 22 பந்துகளில் 45 ரன்கள் அடித்ததை பற்றி முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

வெலிங்டனில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான  5வது மற்றும் கடைசி நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியது. 

இதில் இந்திய அணி பேட்டிங் செய்த போது இளம் வீரர் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என வெறும் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். தடைக்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு பாண்டியா விளையாடும் 2வது போட்டி இது. இதில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "இன்றைய போட்டியில் பாண்டியா விளையாடிய அனைத்து ஷாட்களும் முழுக்க முழுக்க திட்டமிட்டு விளையாடிது. அவர் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை. பந்தை கவனித்து கணித்து விளையாடி இருக்கிறார். அவர் விளையாடுவதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close