உலக கோப்பை தான் முக்கியம்... ஐபிஎல் குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ள ரவி சாஸ்திரி

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:07 pm
ravi-shastri-keen-to-limit-indian-bowlers-participation-in-ipl-2019

ஐசிசியின் உலக கோப்பை தொடர் இந்தாண்டு நடக்கவிருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் முடிந்தவரை குறைவான பங்களிப்பை அளித்தால் போதும் என்ற முடிவை பயிற்சியாளர் எடுத்துள்ளார். 

இந்தியாவின்  கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர். ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும் இந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையிலும் இந்தியாவிலேயே முழுமையாக நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்தாண்டு ஐசிசியின் உலக கோப்பை தொடரும் நடக்கவிருக்கிறது. எனவே இந்த பிசிசிஐக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பெற்று வந்தாலும் அடிக்கடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே ஐபிஎல்லின் போது யாருக்காவது காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பிசிசிஐ உள்ளது. 

எனவே, ஐபில் இந்திய வீரர்கள்.. குறிப்பாக வேகபந்து வீச்சாளர்கள் குறைவான பங்களிப்பு அளித்தாலே போது என்று ஐபிஎல் அணிகளிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றாலும் முடிந்தவரை வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் படி செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close