தோனி தலைமையில் விளையாடுவது குறித்து நெகிழும் சாஹல்

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 12:09 pm
big-thing-to-play-under-ms-dhoni-says-yuzvendra-chahal

தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவது பெரிய விஷயமாக கருதுவதாக இளம் பந்துவீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர் தோனி இன்றும் தான் செய்யும் ஒவ்வொன்றிலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த உலகக் கோப்பையோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல்களும் வந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் தோனி தரப்பில் இதுகுறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 

தோனியின் விளையாட்டு திறன் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வந்தாலும், அவர் இந்திய அணிக்கு மிக முக்கியமான நபர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

குறிப்பாக இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தோனி சிறந்த ஆலோசகராக இருக்கிறார். இந்நிலையில் தோனியுடன் விளையாடுவது குறித்து பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நெகிழ்ந்து பேசி உள்ளார். 

அவர் பேசும் போது, "எனக்கு ஏதாவது புதிய யோசனைகள் வரும் போது அணியில் மூத்தவர்களான விராட் கோலி, தோனி, ரோஹித் ஆகியோரிடம் சென்று தான் பேசுவேன். அவர்கள் எப்போதும் எனக்கு உதவி செய்வார்கள். தோனியும் நானும் பப்ஜி விளையாடுவோம். தோனியின் தலைமையின் கீழ் விளையாடுவதை பெரிய விஷயமாக கருதுகிறேன். அவர் தான் எனது முதல் கேப்டன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close