பெங்களூரில் இன்று நடக்கிறது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 12:38 pm
can-aaron-finch-and-co-break-their-11-year-long-streak-in-bengaluru

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து  இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. 

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து குறுகிய வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரண்டு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் இந்திய அணிகளமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழப்பதில் இருந்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தப்ப முடியும்.

உலகக்கோப்பைக்கு முந்தைய தொடர் என்பதால் இந்த தொடரை இழப்பது இந்திய அணியின் வீரர்களின் நம்பிக்கையை குறைத்துவிடும் என்பதால் வெற்றி மட்டுமே அணியின் இலக்காக இருக்கிறது. 

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தால் 3வது முறையாக டி20 போட்டியில் தொடர்ந்து 3 முறை இந்தியா தோல்வியடைந்ததாக ஆகிவிடும். 

முதல் டி20 போட்டியில் கே.ராகுல், தோனியை தவிர்த்து எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. இன்று போட்டி நடக்கும் சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங்கை எதிர்பார்க்கலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close