சொந்த ஊரில் தோனியின் கடைசி ஒருநாள் போட்டி?

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:56 am
dhoni-s-last-odi-in-his-homeground

உலகக்கோப்பை போட்டித் தொடருக்கு பின்பு எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் உலவி வரும் நிலையில், இன்று ராஞ்சியில் நடைபெற இருக்கும் போட்டி அவர் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி என்று கூறப்படுகிறது. 

ஐசிசியின் அனைத்து கோப்பைகளை வாங்கி குவித்த தோனிக்கு தற்போது 37 வயதாகிறது. இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் இவரின் நிலையற்ற ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இருந்தும் அவர் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. 

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா வென்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும். 

மேலும் இது, தமது சொந்த ஊரில் தோனி விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி என்றும் கூறப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் தோனி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி நேற்று தனத வீட்டில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close