தோனியும் தான் கேட்ச்சை விட்டிருக்கிறார்: பண்ட் மீதான விமர்சனம் குறித்து பயிற்சியாளர்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 03:18 pm
rishabh-pant-s-coach-hits-out-at-critics-says-even-ms-dhoni-missed-catches

மொஹாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முக்கியமான ஸ்டம்பிங்கை தவறவிட்ட பண்ட் மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவரது பயிற்சியாளர் தோனியும் தான் கேட்ச்சை விட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 350க்கும் மேல் ரன்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது, முக்கியமான இரண்டு ஸ்டம்பிங்கை பண்ட் தவறவிட்டார். அப்போது மைதானத்தில் இருந்தவர்கள் "தோனி... தோனி" என்று கோஷமிட்டனர். 

மேலும் ட்விட்டரிலும் பலரும் தோனிக்கு மாற்று இப்போதைக்கு யாரும் இல்லை பதிவிட்டனர். சிலர் பண்ட் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து பண்ட்டின் சிறு வயது பயிற்சியாளர் தாரக் சின்கா பேசி உள்ளார். அவர் பேசும் போது, "தோனியை போல பண்ட்டும் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேனாக இருப்பதால் தான் இவ்வாறான பேச்சுகள் எழுகின்றன. இது மிகவும் தவறானது.

தோனியை போல இருக்க வேண்டும் என்று பண்ட்டின் மீது அழுத்தம் கொடுப்பது சரியல்ல. அவர் அழுத்தம் இல்லாத போது சிறப்பாக விளளாயடி உள்ளார். தோனி 14 வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும், இப்போது இருக்கும் பண்ட் இருப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது.

தோனி அணியில் சேர்ந்த போது அவருக்கு முன் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான்கள் இல்லை. அப்போது தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் போன்ற இளம் வீரர்கள் தான் இருந்தனர். எனவே தோனிக்கு பெரிதாக அழுத்தம் இல்லை. 

இந்த உலகில் எந்த கீப்பர் தான் கேட்சை மிஸ் செய்யவில்லை?. தோனியும் அவரது தொடக்க காலத்தில் ஸ்டம்பிங்கை விட்டிருக்கிறார். அப்போது தேர்வாளர்கள் தோனியை நம்பினார்கள். அவர் பின்னர் தனது திறமையை மேம்படுத்திக்கொண்டார்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close