மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய்னா: சுவிஸ் ஓபன் விளையாடமாட்டார்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:54 am
saina-nehwal-admitted-in-hospital-due-to-stomach-pain

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான சாய்னா நேவால் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் சுவிஸ் ஓபன் தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா நேவால் தனது சமூக வலைதளத்தில் இச்செய்தி குறித்து பதிவிட்டுளளார். 

 

— Saina Nehwal (@NSaina) March 13, 2019

 

அதில், "வருத்தமான செய்தி.. கடந்த திங்கள் கிழமையில் இருந்து கடுமையான வயிற்றுவலியை அனுபவித்து வருகிறேன். இங்கிலாந்தில் விளையாடிய போது சமாளித்து தான் விளையாடினேன். தற்போது சுவிஸ் ஓபன் தொடரில் விளையாட மாட்டேன். வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளேன்" என தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் விரைவில் குணமடைந்து வருவேன் எனவும் சாய்னா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close