தோனியை சேர்த்தால் மட்டும் சரியாகிவிடுமா?: விராட் கோலிக்கு கம்பீர் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:26 am
gautam-gambhir-contradicts-virat-kohli-s-wc-playing-xi-statement-in-5th-odi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டித் தொடரில் தோனியை சேர்த்தால் மட்டும் உலகக்கோப்பை வெல்ல இந்திய அணி தயாராகிவிடுமா என்று இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியியல் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடரை பறிக்கொடுத்துள்ள நிலையில் உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த தொடர் முழுக்க அணியை மாற்றி மாற்றி விளையாட வைத்து கடைசி வரை சிறப்பான அணியை பிசிசிஐ உருவாக்கவில்லை என்ற விமர்சனம் பலரால் முன் வைக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தோல்விக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, "உலகக் கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உருவாகிவிட்டது. ஒரு ஒரு சில மாற்றம் மட்டும் தேவை" என கூறினார். 

அவர் தோனியையும், பாண்டியாவையும் தான் குறிப்பிட்டு அவ்வாறு பேசினார். இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். 

அவர் பேசும் போது , “உலகக்கோப்பை அணி விவரம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல்லுக்குப் பிறகு உலகக்கோப்பையை நோக்கித்தான் நம் அணியின் பயணம் இருக்கும் ஆகவே அணியில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை.  இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணியாக இருக்க முடியாது என்று உத்தரவாதமாகக் கூறுகிறேன்.

விராட் கோலி இந்தியாவின் உலகக்கோப்பை அணி இதுவாகவிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த லெவன் நிச்சயம் நம்பிக்கையளிப்பதாக இல்லை. தோனியை இந்த அணியில் சேர்த்தல் மட்டும் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயார் என செல்லிவிடமுடியாது"என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close