உலகக்கோப்பைக்கான இந்திய அணியில தினேஷ் கார்த்திக் வேண்டும்: சைமன் கேடிச்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 12:18 pm
simon-katich-emphasizes-dinesh-karthik-s-role-as-the-finisher

இங்கிலாந்தில் இந்தாண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், தினேஷ் கார்த்திக் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேடிச் தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினர். இதில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினர். உலகக்கோப்பை தொடருக்கு முன் சில சோதனைகள் செய்ய வேண்டும் என்பதால் இதனை செய்ததாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. 

ஆனால் இதில் ரிஷப் பண்ட்டும், விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின்முன்னாள் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளருமான சைமன் கேடிச் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அவர் பேசும் போது, "கடினமான நேரத்தில் கூட சிறப்பாக விளையாடக்கூடிய தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை. அவர் எப்படி விளையாடுவார் என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். எனவே அவர் நிச்சயம் இந்திய அணியில் இருக்க வேண்டும். நிறைய திறமையான வீரர்கள் இருக்கும் போது தேர்ந்தெடுப்பது கடினமாக தான் இருக்கும். 

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கவாஜா மற்றும் அஷ்டன் டர்னர் சிறப்பாக விளையாடினர்.ஸ்மித்தும் வார்னரும் அணியில் சேர்ந்துவிட்டால் அந்த அணி இன்னும் நம்பிக்கையை பெறும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close