IPL 2019: ராஜ மரியாதையோடு ராஜஸ்தானுடன் இணைந்தார் ஸ்மித்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 04:37 pm
ipl-2019-a-royal-welcome-for-steve-smith-in-rajasthan-camp

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான தடைக்காலம் முடிய உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள ராஜஸ்தான் வந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம். இதில் சிக்கிய அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவர்களின் தடைகாலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துக்கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்பாக அவர்கள் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றனர். 

 

 

கடந்தாண்டு தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. வரும் மார்ச் மாதம் 23ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஸ்மித் ராஜஸ்தான் வந்தடைந்தார். அவருக்கு அந்த அணி சார்பில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது. 

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் கடந்தாண்டு விளையாடாததால் அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக செயல்பட்டார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி ப்ளேஆஃப் வரை சென்றது. இந்நிலையில் ரஹானேவே கேப்டனாக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close