நடந்து வரும் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் நேற்று நடந்த ஆட்டத்தில் நைஜீரியா அணி, ஜப்பானை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதில் ஆச்சிர்யம் என்னவென்றால், நைஜீரிய அணி போட்டி துவங்க 6 மணி நேரத்திற்கு முன் தான் பிரேசிலில் வந்து இறங்கியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் தங்கியிருந்த வீரர்களுக்கு கடைசி நேரத்தில் தான் பிரேசிலுக்கு டிக்கெட் கிடைத்துள்ளது. ஆனாலும், மனம் தளராமல் ஆக்ரோஷமாக விளையாடிய நைஜீரியா சூப்பர் வெற்றி பெற்று ஒலிம்பிக்ஸை துவக்கியுள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.