பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 09:20 am
pakistan-bans-broadcast-of-indian-premier-league-2019-matches

பாகிஸ்தானில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஒளிப்பரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்லின் 12வது சீசன் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்நிலையில் இத்தொடரை அண்டை நாடான பாகிஸ்தானில் ஒளிப்பரப்பு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் ஃபவாத் அஹ்மத் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசம் போது,"பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது அதற்கு இந்தியாவின் எதிர்வினை ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை, எனவே தற்போது ஐபிஎல் போட்டியை பாகிஸ்தானில் ஒளிப்பரப்ப தடை விதித்துள்ளோம். 

நாங்கள் அரசியலையும் கிரிக்கெட்டையும் வெவ்வேறாக தான் பார்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது. அதற்கு ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஐபிஎல் ஒளிப்பரப்பை ரத்து செய்தால் அது பிசிசிஐக்கு பின்னடைவாக தான் இருக்கும்" என்றார். 

கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு  பிஎஸ்எல் ஒளிப்பரப்பு உரிமையை பெற்றிருந்த இந்திய நிறுவனம் அதனை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close