ஒலிம்பிக்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரியோ ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். வால்ட் பிரிவில் பங்கேற்ற தீபா, முதல் முறை கடினப் பிரிவில் 7 புள்ளிகளும், எக்சிகியூஷன் பிரிவில் 8.1 புள்ளிகளும் பெற்றார். ஆனால் இரண்டாவது முறை சிறிது சறுக்கலை சந்தித்தாலும், தன் திறமையை வெளிப்படுத்தி வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஜிம்னாஸ்டிக்கின் வால்ட் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close