ஐபிஎல்: சிஎஸ்கே VS கேகேஆர் - கலக்கப் போவது யாரு?

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 04:34 pm
csk-vs-kkr-match-at-chepauk-preview-and-prediction

- வி.இராமசுந்தரம் -

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் அனைத்து விதத்திலும் பலம் பொருந்திய அணிகளான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளுமே ஒரே புள்ளிகளை பெற்று, கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-ஆவது இடத்திலும் உள்ளது. இருஅணிகளும் பட்டியலில் இருந்து கீழே இறங்காமல் வெற்றி பெற்று அதையே தொடர விரும்பும்.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பிராவோ இல்லாமல் சென்னை அணி களமிறங்கியது. சரியான நேரத்தில், அவர் இல்லாத குறையை போக்கினார்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ஜடேஜா. அனுபவம் வாய்ந்த இந்த மூன்று பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்கள் வீசி 59 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த தொடரில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய, அனுபவம் வாய்ந்த டுபிளிசஸ், கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஓபனிங் இறங்கி அரைசதம் அடித்து அசத்தினார்.

தோனியும் கடைசியில் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவிபுரிகிறார். அவர் கடைசி வரை நின்று ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் திறன்பட செயல்படுகிறார்.

மறுபுறம், சென்னை அணியை போலவே கொல்கத்தா அணியின் வெற்றிக்கு  பியுஷ் சாவ்லா, சுனில் நைரேன், குல்தீப் யாதவ் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அவர்களும் கடந்த போட்டியில், மொத்தம் 12 ஓவர்கள் வீசி வெறும் 74 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். இரு அணி ஸ்பின்னர்களும் தங்களின் அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளனர்.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நைரேன், கிறிஸ் லைன் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதில் கில்லாடியாக உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இவர்களை தொடக்கத்திலேயே சென்னை பவுலர்கள் பிரித்து விடுவது நல்லது.

கொல்கத்தா ஆடிய எல்லா போட்டிகளிலும். அந்த அணியை ரஸ்சூல் என்ற மாமனிதன் தனது தோளில் சுமக்கிறார். அதுவும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அணியை ஆபத்பாண்டவனாக மீட்டார் ரஸ்சூல். சேப்பாக்கம் மைதான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். 160 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் ஆகும்.

முதலில் சொன்னது போலவே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில், இரு அணிகளும் பலம் வாய்ந்தவைகளாக உள்ளன. உள்ளூர் என்பதால் சென்னைக்கு கூடுதல் பலமாகும். 

இன்று நடைபெறவுள்ள ஆட்டம், இந்த தொடரில் நடக்கவுள்ள இறுதி ஆட்டத்திற்கு உள்ள எதிர்ப்பார்ப்பை போல இருக்கும். இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை  நேருக்கு நேர் 18 முறை மோதியுள்ளன. அதில், சென்னை 11 முறையும், கொல்கத்தா 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close