தங்க நாயகன் பிந்த்ரா ஒலிம்பிக்கில் தோல்வி

  shriram   | Last Modified : 09 Aug, 2016 04:44 pm
நேற்று நடந்த 10மீ ஏர் ரைபிள் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் நழுவ விட்டார். இறுதிச் சுற்றின் 16வது ஷாட்டின் முடிவில் 163.8 புள்ளிகளுடன் உக்ரைன் வீரருடன் சமநிலையையில் இருந்த பிந்த்ரா, அதன் பிறகு சற்று தடுமாறி 4வது இடத்தை பிடித்தார். ஒலிம்பிக்கில் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்த போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்தியர் ககன் நரங் 23வது இடத்தையே பிடித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close