நியூசி. டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு சாம்சன் நீக்கம்

  சாரா   | Last Modified : 13 Jan, 2020 04:13 pm
india-team-announced-for-nz-tour

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள்  விளையாட இருக்கிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

                                                  

இந்திய அணி ஜனவரி 24 ஆம் தேதி நியூசிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த தொடரில் இலங்கை அணிக்கு எதிராக ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா,முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த தொடரில் தோனி மீண்டும் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தோனிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close