இந்த வருடத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியில் தோனி கிடையாது! பிசிசிஐ லிஸ்ட்டில் தோனி பெயர் மிஸ்ஸிங்!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 02:56 pm
ms-dhoni-misses-out-on-bcci-s-annual-player-contract

கடந்த வருடம் நியூஸிலாந்துக்கு எதிரான  உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து இந்திய அணியினர் பல்வேறு டி20 தொடர்களிலும், ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்ற நிலையிலும், அந்த அணிக்கான வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தோனி அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலோ தோனி தரப்பிலோ இதுவரையிலும் எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

                                  
இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலை தற்போது பிசிசிஐ  வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பிரிவுகளிலுமே தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 


ஏ பிளஸ் கிரேடில் இருப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடியும், ஏ கிரேடு ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடியும் ஊதியங்களாக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close