கோலியை வாழ்த்திய சாருலதா பாட்டி மரணம்! பிசிசிஐ இரங்கல்!!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 03:20 pm
charulata-patel-87-year-old-who-cheered-for-team-india-during-2019-world-cup-dies

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையாக இருந்து வந்த சாருலதா(87) பாட்டி மரணம். சாருலதா பாட்டியின் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வந்த சமயத்தில், இந்தியாவிற்கும், வங்கதேச அணிக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியைக் காண, மைதானத்திற்கு வந்திருந்த சாருலதா பாட்டி, இந்திய அணியினரிடம் பெரும் கவனம் பெற்றார். 

                                          

தள்ளாடும் வயதிலும் கிரிக்கெட் மீதான அவரது அன்பையும், ஈர்ப்பையும் கண்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, அப்போது சாருலதா பாட்டியிடம் சென்று பேசினார்.  இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் சாருலதா குடும்பத்துடன் போட்டிகளை காண டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்வதாகவும் அவரிடம் கோலி வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து இந்தி‌ய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று 87 வயது கிரிக்கெட் ரசிகை சாருலதா‌ இ‌லங்கை அணியுடனான போட்டியை நேரில் கண்டு ரசிக்கவும் போட்டி நடைப்பெற்ற மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் இன்று காலமானார்.

 

தீவிர கிரிக்கெட் ரசிகையும், இந்திய கிரிக்கெட் அணியை ஒவ்வொரு போட்டிகளிலும் நேரில் வந்து உற்சாகப்படுத்தி வந்த சாருலதா பாட்டியின் மரணத்திற்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது, "இந்தியாவின் சூப்பர் ரசிகரான சாருலதா படேல் ஜி எப்போதும் விளையாட்டு வீரர்களின் இதயத்தில் நிலைத்திருப்பார், மேலும் அவரின் விளையாட்டின் மீதான ஆர்வம் விரர்களை ஊக்கப்படுத்தியது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" என ட்விட்டரில் பிசிசிஐ பதிவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close