தோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா? நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே

  சாரா   | Last Modified : 20 Jan, 2020 02:13 pm
good-news-ms-dhoni-fans

சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன்,  தோனி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலில் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 பிரிவுகளின் கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு பிரிவுகளிலுமே தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

                                            

ஜூலை 2019 முதல் தோனி எந்த விதமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அவர் கடைசியாக நியூசிலாந்திற்கு எதிராக 2019 உலகக் கோப்பையில் விளையாடினார். இனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது சிரமமே என்ற விமர்சனம் எழுந்தது.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றி சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன்,  தோனி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

                                                     

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே.வின் ஒரு அங்கமாக உள்ளார் தோனி. தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. 'எம்எஸ் தோனி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று மக்கள் பேசுகிறார்கள். தோனி நிச்சயம் விளையாடுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் விளைாடுவார்.அத்துடன் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தின் போது அவரை மீண்டும் தக்க வைத்துக் கொள்வோம். இதில், யாருக்கும் சந்தேகம் வேண்டாம்'என்று குறிப்பிட்டார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close