இந்திய அணி பீல்டிங்! (INDvsNZ)

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 12:19 pm
india-won-the-toss-and-elected-to-field

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு நியூசிலாந்திற்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். 

இந்திய அணி விவரம்:
ரோஹித் ஷர்மா, லோகேஷ்  ராகுல், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, சார்துல் தாகூர், பும்ரா, யுஸ்வேந்திர சஹால், முகம்மது ஷமி.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close