பிபிஎல்: சாய்னா விலகல்; ஸ்ரீகாந்த், காஷ்யப் வெற்றி

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2017 10:30 pm

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 3-வது சீசன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷ்ர்ஸ் அணியின் பிவி சிந்து- அவாதே வாரியர்ஸ் அணியின் சாய்னா நேவால், மோதுவதாக அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னாவை வீழ்த்தியிருந்த சிந்து, பிபிஎல்-ளிலும் அவரை மூன்று முறை எதிர்த்து இரண்டு வெற்றியை கண்டுள்ளார்.

இதனால் இன்று நடக்க இருந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சாய்னா, காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 30ம் தேதி நடக்கவிருக்கும் 2-வது ஆட்டத்தில் சாய்னா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய்னா இல்லாததால், வாரியர்ஸ் அணியை முன்னிலைப்படுத்தும் பொறுப்பு ஸ்ரீகாந்த், காஷ்யபுக்கு இருந்தது. 

துவக்க போட்டியில் மோதிய சென்னை ஸ்மாஷ்ர்ஸ்- அவாதே வாரியர்ஸ்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்ரீகாந்த் (வாரியர்ஸ்)- பரிஸ் லெவெர்டேஸை (ஸ்மாஷ்ர்ஸ்) 15-12, 15-13 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். இதே போல், வாரியர்ஸின் காஷ்யப், 15-12, 15-8 என்ற நேர்செட்களில் டேனியலை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையரில் டாங் சுன் மேன் - கிறிஸ்டின்னா பெர்சென் (வாரியர்ஸ்), 15-10, 5-15, 15-12 என கேபிரிலா- கிறிஸ் அட்காக் இணையை வீழ்த்தி, அணியை முன்னிலைப்படுத்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close