பிபிஎல்: அரையிறுதியில் பிரணாயின் அகமதாபாத் அணி

  நந்தினி   | Last Modified : 10 Jan, 2018 05:59 pm


நேரு உள்ளரங்கத்தில் நடைபெற்று வரும் பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் அகமதாபாத் வெற்றி பெற்றது. மொத்தம் 17 புள்ளிகளை அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி பெற்று இருந்தது. 

ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரணாய் 15-12, 15-12 என்ற நேர்செட் கணக்கில் உலகின் 5ம் நிலை வீரர் சான் வான் ஹோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில், சௌரப் வர்மா (அக.) 15-14, 15-11 என்ற கணக்கில் அவரது சகோதரர் சமீர் வர்மாவை (மும்பை) தோற்கடித்தார்.

இதே போல், அகமதாபாத் அணியின் தாய் ட்சு யிங் 15-9, 15-12 என மும்பையின் பெய்வென் ஜாங்கை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் அகமதாபாத் அணியின் கமில்லா ரிட்டர் ஜுஹல்- லா செக் ஹிம் இணை 15-11, 15-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரட்டையர் பிரிவில் மட்டும் அகமதாபாத் இணை தோல்வி கண்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close