இறுதி போட்டியில் சாய்னா தோல்வி!

  SRK   | Last Modified : 28 Jan, 2018 04:43 pm


இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில், இன்று இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சீன வீராங்கனை தாய் சூ யிங்கிடம் மோதினார். காயங்களில் இருந்து மீண்டு மறுபடியும் பார்முக்கு வந்துள்ள 9ம் நிலை வீராங்கனை சாய்னா, தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள தாய் சூவுடன் மோதியது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய தாய் சூ-விடம் 21-9, 21-13 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா தோற்று அதிர்ச்சி கொடுத்தார். வெறும் 27 நிமிடங்களில் வென்று கோப்பையை கைப்பற்றினர் தாய் சூ.

சுமார் 2.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்த தொடரின் காலிறுதியில், நட்சத்திர வீராங்கனை பிவி.சிந்துவை சாய்னா தோற்கடித்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close