இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்; பிரணாய் அவுட்

  நந்தினி   | Last Modified : 01 Feb, 2018 10:30 am


டெல்லியில் நேற்று இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் சாய்னா நேவால், பிவி சிந்து வெற்றி பெற்றனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் 21-15 21-9 என்ற நேர்செட் கணக்கில் டென்மார்க்கின் சோஃபி ஹோல்ம்போயை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி அடைந்தார். 

நடப்பு சாம்பியன் பிவி சிந்து 21-10 21-13 என்ற கணக்கில் டேனிஷின் நடாலியா கோச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆகர்ஷி காஷ்யப் மற்றும் ருத்விகா ஷிவானியும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆண்கள் ஒற்றையர் துவக்க போட்டியில், சாய் பிரனீத் 21-11 17-21 21-17 என இங்கிலாந்தின் ராஜிவை வீழ்த்தி, 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காயத்தினால் அவதிப்பட்டு வரும் ஹெச்.எஸ். பிரணாய், 4-21, 6-21 என இந்தியாவின் ஸ்ரீயான்ஷ் ஜெய்ஸ்வாலிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close