இந்தியன் ஓபன்: சாய்னா, பிரணவ்- சிக்கி அவுட்

  நந்தினி   | Last Modified : 03 Feb, 2018 11:13 pm


டெல்லியில் நடந்து வரும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து நேற்று சாய்னா நேவால் வெளியேறினார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் 11ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கிடம் 10-21, 13-21 என்ற கணக்கில் சாய்னா தோல்வி கண்டார். இதன் மூலம், அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்ட சாய்னா, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னதாக, பிவி சிந்து, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். உலக தரவரிசையில் 3ம் இடம் வகிக்கும் தாய்லாந்தின் ரட்சனோக்கை, அரையிறுதியில் சிந்து சந்திக்க இருக்கிறார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் பிரணவ் சோப்ரா- சிக்கி ரெட்டி ஜோடி 16-21, 19-21 என்ற கணக்கில் டென்மார்க் இணையிடம் தோல்வியை தழுவி வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close