ஆசிய டீம் பேட்மிண்டன்: சிந்து அணி 3-2 என முன்னிலை

  நந்தினி   | Last Modified : 06 Feb, 2018 05:18 pm


மலேசியாவில் ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிந்துவின் இந்திய அணி, துவக்க போட்டிகளில் ஹாங்காங் அணியை வென்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் துவக்க போட்டியில் ஹாங்காங்கின் இப் புய் யின்னை எதிர்கொண்ட சிந்து, 21-12, 21-18 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இரட்டையர் பிரிவில், இந்திய இணையான அஷ்வினி பொன்னப்பா- சாவந்த், தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில், இந்தியாவின் பிரியா குடாரவல்லி தோல்வி அடைந்தார். இதனால் சிந்து அணி, 1-2 என பின்னிலை வகித்தது. 

இதனை தொடர்ந்து, சிக்கியுடன் ஜோடி சேர்ந்த சிந்து, அணி புள்ளியை சமநிலை படுத்தினார். இதன் பின் நடந்த மூன்றாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனை ரித்விகா ஷிவானி, வெற்றி பெற்று அணியின் புள்ளியை உயர்த்தினார். இதனால், சிந்து அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close