ஆசிய பேட்மிண்டன்: இந்திய ஆண்கள் அணி வெற்றி

  நந்தினி   | Last Modified : 07 Feb, 2018 07:49 pm


மலேஷியாவில் நடந்துவரும் ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்துவின் இந்திய பெண்கள் அணி 3-2 என ஹாங்காங்கை நேற்று வீழ்த்தியிருந்தது. இதனை தொடர்ந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பியின் இந்திய ஆண்கள் அணி, 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்ரீகாந்த் 21-11, 21-12 என்ற நேர்செட் கணக்கில் பிலிப்பைன்ஸின் ரோஸ் லியோனார்ட் பெட்ராஸாவை தோற்கடித்தார். இரட்டையரில், மனு அத்ரி- சுமித் ரெட்டி 21-15, 21-13 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றனர். 

இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாய் பிரனீத் 21-6, 21-10 என ஆர்தர் சாமுவேலை தோற்கடித்தார். இரண்டாவது இரட்டையர் பிரிவி போட்டியில், இந்தியாவின் அர்ஜுன்- ராமச்சந்திரன் இணையும், மூன்றாவது ஒற்றையர் பிரிவி ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மாவும் வெற்றி கண்டனர். இதனால் இந்திய அணி 5-0 என வெற்றி பெற்றது.

இன்று இந்திய ஆண்கள் அணி, மாலத்தீவு அணியையும்; இந்திய பெண்கள் அணி நாளை (8ம் தேதி) ஜப்பான் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close