ஜப்பானிடம் தோல்வி; காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

  நந்தினி   | Last Modified : 08 Feb, 2018 01:48 pm


பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பானிடம் 1-4 என இந்திய அணி தோல்வியை தழுவினாலும், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் போட்டியில், பிவி சிந்து 21-19, 21-15 என்ற நேர்செட் கணக்கில் யகனே யமாகுச்சியை 36 நிமிடத்தில் வீழ்த்தி, அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். 

ஆனால், அதன் பிறகு நடந்த இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணபிரியா குடரவல்லியும், 3-வது ஒற்றையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பாவும் தோல்வியை தழுவினர். இதே போல், இரட்டையர் ஆட்டத்தில், இந்தியாவின் சன்யோகிதா- ப்ரஜக்தா சாவந்த் ஜோடி மற்றும் அஷ்வினி- சிக்கி ரெட்டி இணையும் தோல்வி அடைந்தது.  

இந்திய பெண்கள் அணி, துவக்க போட்டியில் ஹாங்காங் அணியை வென்றிருந்தது. குரூப் டபிள்யு-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஒரு வெற்றி மற்றும் தோல்வியை பெற்றுள்ளது.

குரூப் டி-ல் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி, பிலிப்பைன்ஸ் மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம், காலிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப் பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, இந்தோனேஷியாவை சந்திக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close