ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் வெளியேற்றம்

  நந்தினி   | Last Modified : 10 Feb, 2018 03:28 pm


ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, காலிறுதியுடன் வெளியேறியது. 

இந்திய பெண்கள் அணி, 1-3 என்ற கணக்கில் சீனா அணியிடம் காலிறுதியில் தோல்வி கண்டது. ஒற்றையர் பிரிவில், பிவி சிந்து 21-13, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பெண்கள் அணிக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால், அணியில் நடந்த மற்ற ஆட்டங்களில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெறாததால், தொடரில் இருந்து வெளியேறியது. 

இதே போல் ஆண்கள் அணியும் 1-3 என இந்தோனேஷியாவிடம் வீழ்ந்தது. ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மட்டும் வெற்றி பெற்று அணியை முன்னிலை படுத்தினார். மற்ற போட்டிகளில் வெற்றி பெற முடியாததால், ஆண்கள் அணியும் காலிறுதியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close