ஆல் இங்கிலாந்து ஓபன்: சிந்து மீண்டும் வெற்றி!

  SRK   | Last Modified : 15 Mar, 2018 09:46 pm


இன்று நடந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் ஓபன்  இரண்டாவது சுற்று போட்டியில், இந்திய வீராங்கனை பிவி.சிந்து மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

தாய்லாந்து வீராங்கனை நிட்சவோன் ஜிந்தபோலுடன் நடந்த இந்த இரண்டாவது சுற்று போட்டியில், சிந்து போராடி வென்றார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த கடினமான போட்டியில், 21-13, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வென்றார். 

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தியபின், இரண்டாவது சுற்றில் சற்று சோர்வாக விளையாடினார் சிந்து. கடைசி செட்டில் இரண்டு வீராங்கனைகளும் 18-18 என்ற நிலையில் இருந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி தொடர்ந்து 3 புள்ளிகளை பெற்று சிந்து அசத்தினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close