ஆல்-இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் பிவி சிந்து

  நந்தினி   | Last Modified : 17 Mar, 2018 12:24 pm


பிர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் பிவி சிந்து. 7ம் இடம் வகிக்கும் ஜப்பானின் நோஸ்ஓமி ஒகுஹராவை 20-22, 21-18, 21-18 என்ற கணக்கில் பிவி சிந்து, ஒரு மணி நேரம் 24 நிமிடத்தில் தோற்கடித்தார். உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் சிந்து, அரையிறுதியில் 2-வது இடத்தை பெற்றிருக்கும் ஜப்பானின் யகனே யாமாகுசியை சந்திக்கிறார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில், 16ம் இடம் வகிக்கும் இந்தியாவின் ஹெச.எஸ். பிரணாய், 22-20, 16-21, 21-23 என 42-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹுவாங் யுஜிங்கிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். பிரணாய், யுஜிங்கிடம் 2015 மற்றும் 2017ல் இரண்டாவது சுற்றிலும், 2016ல் முதல் சுற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close