துணை ஆட்சியராக பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி நியமனம்

  Newstm Desk   | Last Modified : 29 Mar, 2018 03:31 pm


இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு, துணை ஆட்சியர் பதவியை ஆந்திர அரசு வழங்கியுள்ளது.

இன்று அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஸ்ரீகாந்த்திடம் துணை ஆட்சியர் பதவிக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது முன்னாள் ஆல்-இங்கிலாந்து சாம்பியனான பயிற்சியாளர் புல்லெலா கோபிசந்தும் உடன் இருந்தார். 

அண்மையில், பத்ம ஸ்ரீ விருது பெற்றதற்காக ஸ்ரீகாந்தை, முதலமைச்சர் பாராட்டினார். பி.வி.சிந்துவுக்கு பிறகு, பத்ம ஸ்ரீ விருது பெரும் இரண்டாவது இளம் விளையாட்டு வீரர் ஸ்ரீகாந்த் ஆவார்.

கடந்த ஆண்டு இந்தோனேஷியா சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பின், ஸ்ரீகாந்துக்கு, சந்திரபாபு நாயுடு தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அன்று ஸ்ரீகாந்துக்கு அரசு பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close